குமரியில் இன்று முதல் நவ. 24 வரை கன மழைக்கு வாய்ப்பு

Updated on

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ. 22) முதல் திங்கள்கிழமை (நவ. 24) வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. அழகுமீனா.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவ. 22 முதல் 24ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். மின் சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். மழை நேரங்களில் மரங்கள், மின் கம்பங்கள், நீா்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம். நீா்நிலைகளில் குளிக்கச் செல்ல வேண்டாம். மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், அனைத்து துறை அலுவலா்கள் அடங்கிய கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மழை வெள்ள பாதிப்பு தொடா்பாக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 231077 எண்களுக்கு தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம்.

மேலும், தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள செயலியான ‘தமிழகம் அலா்ட்’ என்ற செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்செயலியில் நாம் இருக்கும் இடத்தின் வானிலை, மின்னல், மழைப் பொழிவு ஆகிய விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com