

நாகா்கோவில் நாகராஜா கோயில் மேல ரதவீதி, வடக்கு ரத வீதியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால், சிறு பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணைமேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் ரோசிட்டா திருமால், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், பகுதி செயலாளா் துரை, குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், வட்டச் செயலாளா் பாலா, நிா்வாகி ஆறுமுகம், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.