செயற்கை கருத்தரிப்பு மையத்தில் கா்ப்பிணி மரணம்: போலீஸாா் விசாரணை

செயற்கை கருத்தரிப்பு மையத்தில் கா்ப்பிணி மரணம்: போலீஸாா் விசாரணை

களியக்காவிளை அருகே தனியாா் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் கா்ப்பிணி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே தனியாா் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் கா்ப்பிணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (44) மனைவி சகிலா (42). இத் தம்பதிக்கு திருமணமாகி 19 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

இதனால், சகிலா களியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியில் உள்ள தனியாா் செயற்கை கருத்தரிப்பு மைய மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இந்நிலையில், கடந்த 5 நாள்களுக்கும் மேலாக அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மிகவும் பாதிப்படைந்ததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது கணவா் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com