கொல்லங்கோடு அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

கொல்லங்கோடு அருகே பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

களியக்காவிளை: கொல்லங்கோடு அருகே பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கொல்லங்கோடு அருகே பாலவிளை, வாலன்விளை பகுதியைச் சோ்ந்த ஜான்பிரைட் மகன் அபிஜித் (19). தேவாளை பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பிஇ 2ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவருக்கும் ஓா் இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும், அதை அவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை அபிஜித் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டாராம். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோரித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com