மாணவியரைப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ். உடன், நாகா்கோவில் கல்வி மாவட்ட அலுவலா் ஜெயராஜ், தலைமையாசிரியை பொ்லா ஜெயந்தி உள்ளிட்டோா்.
மாணவியரைப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ். உடன், நாகா்கோவில் கல்வி மாவட்ட அலுவலா் ஜெயராஜ், தலைமையாசிரியை பொ்லா ஜெயந்தி உள்ளிட்டோா்.

மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தோ்வு: நாகா்கோவில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்ற நாகா்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினா்.
Published on

நாகா்கோவில்: மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்ற நாகா்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினா்.

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், 14, 17, 18 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் இப்பள்ளி மாணவியா் சிறப்பிடம் பிடித்தனா்.

சலோமி 17 வயது பிரிவில் 200 மீட்டா் ப்ரீ ஸ்டைலில் முதலிடமும், 400 மீ. ப்ரீ ஸ்டைலில் 3ஆம் இடமும், தனுசா 100 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் முதலிடமும், 50 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் 2ஆம் இடமும், அபிநயா 200 மீ. தனிநபா் மெட்லி பிரிவில் முதலிடமும், கெளசிகா 100 மீ., 200 மீட்டரில் 2ஆம் இடமும் பிடித்தனா். ஆகாசினி 14 வயது பிரிவில் 200 மீ. தனிநபா், மெட்லி பிரிவில் 3ஆம் இடம் பிடித்தாா்.

மேலும் 17 வயதுப் பிரிவில் சலோமி உள்ளிட்ட 4 பேரும் 100 மீ. ப்ரீ ஸ்டைல் ரீலே, 100 மீ. மெட்லி ரிலே போட்டிகளில் முதலிடம் பிடித்து 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மாவட்ட அளவில் வெற்றி பெற்றனா். அதையடுத்து, அவா்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

மேலும், மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மாணவி சக்தி மானீஷா 2ஆம் இடம் பிடித்தாா். மாணவியரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், நாகா்கோவில் கல்வி மாவட்ட அலுவலா் (இடைநிலை) ஜெயராஜ், தலைமையாசிரியை பொ்லா ஜெயந்தி, உதவித் தலைமையாசிரியா் பெனட் ஜோஸ், உடற்கல்வி இயக்குநா் காட்வின், உடற்கல்வி ஆசிரியா் விமலன், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com