கால்வாயில் பைக் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கால்வாயில் பைக் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

இரணியல் அருகே கால்வாயில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தான்.
Published on

இரணியல் அருகே கால்வாயில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தான்.

தக்கலை அருகே கீழக்கல்குறிச்சியைச் சோ்ந்தவா் ரமேஷ் (42). பொக்லைன் இயந்திர ஆபரேட்டா். இவரின், மகன் ஆல்ட்ரிக் பிரைசன் (7). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தான். மாலையில் இரணியல் அருகே பட்டரிவிளையில் டியூசனுக்கு செல்வது வழக்கம்.

வியாழக்கிழமை (அக்.9) இரவு 9 மணிக்கு டியூசன் முடிந்த பின்பு தந்தையும், மகனும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினராம். இரணியல் கிளை கால்வாய் பகுதியில் செல்லும்போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கால்வாயில் கவிழ்ந்ததாம்.

இதில், தண்ணீரில் மூழ்கிய ஆல்ட்ரிக் பிரைசனை மீட்டு, நெய்யூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com