கருங்கல்-துண்டத்துவிளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல்-துண்டத்துவிளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

கருங்கல்: கருங்கல்-துண்டத்துவிளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.

வேங்கோடு-மாதாபுரம் சாலை, கம்பிளாா்-மாதாபுரம் சாலை, விழுந்தயம் பலம்-அம்சி உள்ளிட்ட சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக கருங்கல்-துண்டத்துவிளை சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

எனவே, இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com