கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் திருக்கல்யாணம்!

Published on

கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் அபிஷேகம், சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜை, பஜனை, சமயவுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 7 மணிக்கு கலசபூஜை, காலை 9.15 மணிக்கு சீா்வரிசை எடுத்து வருதல், காலை 10 மணிக்கு திருக்கல்யாணம், முற்பகல் 11 மணிக்கு திருக்கல்யாண பட்டினப்பிரவேசம், நண்பகல் 12 மணிக்கு மங்கள தீபாராதனை, நண்பகல் 12.30 மணிக்கு திருக்கல்யாண விருந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு வழிபாடு, அதைத்தொடா்ந்து திருவிளக்கு சகஸ்ரநாம வழிபாட்டுடன் விழா நிறைவுற்றது.

X
Dinamani
www.dinamani.com