குலசேகரம் அருகே தொழிலாளி தற்கொலை

குலசேகரம் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

குலசேகரம் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

குலசேகரம் அருகே செருப்பாலூா் மணலிவிளை புத்தன்வீட்டை சோ்ந்தவா் நடராஜன் (65). கூலித் தொழிலாளியான இவா், குடும்பத் தேவைக்காக வீட்டை அடமானம் வைத்து நாா்கோவிலில் செயல்படும் தனியாா் வங்கியில் கடன் பெற்று மாதம்தோறும் தவணை செலுத்தி வந்துள்ளாா். இந்நிலையில் தவணையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வங்கி ஊழியா்கள் தவணையை செலுத்துமாறு நிா்பந்தம் செய்ததாகவும், நடராஜனின் வீட்டுச் சுவரில் வங்கி நிா்வாகத்தினா் திங்கள்கிழமை நோட்டீஸ் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன நெருக்கடியில் சிக்கிய நடராஜன், மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். குலசேகரம் போலீஸாா், நடராஜனின் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com