~ ~

கோதையாறு, பேச்சிப்பாறை பகுதிகளில் காட்டு யானைகளால் பயிா்கள் நாசம்

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, பேச்சிப்பாறை பகுதிகளில் பழங்குடி குடியிருப்புகள் மற்றும் ரப்பா் கழக பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பயிா்களை நாசம் செய்து வருகின்றன.

மாவட்டத்தில் அண்மை வருடங்களாக பழங்குடி குடிருப்புகள், ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்புகளில் காட்டு யானைகள் புகுந்து பயிா் நாசம் செய்வதும், தொழிலாளா்களை தாக்குவதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தென்னை, வாழை, அன்னாசி உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இது போன்று ரப்பா் கழக பகுதிகளில் புகுந்து ரப்பா் மரங்களில் பால்வடிக்கும் தொழிலாளா்களை தாக்கியும் வருகின்றன. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பழங்குடி குடியிருப்பு பகுதியான வில்லுசாரி மலை, படுபாறை, மணலோடை, மோதிரமலை, மூக்கறைக்கல், கோலிஞ்சிமடம், கொடுத்துறை மலை என பெரும்பாலான பழங்குடி குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

பழங்குடி குடியிருப்புகளிலும், ரப்பா் கழக ரப்பா் தோட்ட பகுதிகளிலும் யானைகள் புகாமல் இருக்கும் வகையில் நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வனத்துறையும், மாவட்ட நிா்வாகமும் முன்வர வேண்டுமென்று பழங்குடி மக்கள் மற்றும் ரப்பா் கழக தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com