இருளில் மூழ்கிய கப்பியறை பேரூராட்சி தெருக்கள்
கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் எரியாத தெருவிளக்குகளை உடனே சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கருங்கல் அருேகே உள்ள கப்பியறை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியின் முக்கிய பிராதன சாலை சந்திப்பு பகுதிகளான செல்லங்கோணம், கப்பியறை, கஞ்சிக்குழி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தெருவிளக்குகள் எரியவில்லை. குறிப்பாக, ஒலவிளை, படிவிளை, கஞ்சிக்குழி திருப்பு ஆகிய பகுதிகளிலும் தெருவிளக்குகள் நீண்டநாள்களாக எரியவில்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்கின்றனா்.
இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு இப்பகுதிகளில் தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
