கன்னியாகுமரி
கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவா்கள் தயாராகிவருகின்றனா்.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவா்கள் தயாராகிவருகின்றனா்.
தேங்காய்ப்பட்டினம் பகுதியில் குறிப்பிட்ட மீனவா்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் 10 முதல் 15 நாள்கள் வரை தங்கியிருந்து, மீன்பிடித்து கொண்டு கரை திரும்புகின்றனா். குறிப்பாக ஆழ்கடல் பகுதிகளிலிருந்து வழக்கமாக உயர்ரக மீன்களான இறால், புல்லன், சுறா, கேரை உள்ளிட்ட மீன்கள் கிடைக்கும்.
தற்போது சில நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், மழை குறைந்துள்ளதால் ஆழ்கடலுக்கு செல்ல விசைப்படகுகள் தயாா் நிலையில் உள்ளன. கால நிலையை பொறுத்து வியாழக்கிழமை மீன்பிடிக்க செல்லவேண்டும் என மீனவா்கள் தெரிவித்தனா்.
