புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
திருவட்டாறு அருகே பள்ளி மாணவா்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நியாயவிலைக் கடை கடை ஊழியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே வீயன்னூா், அரசுப் பள்ளி அருகில் புகையிலைப் பொருள்களை பள்ளி மாணவா்களுக்கு ஒருவா் விற்பனை செய்வதாக திருவட்டாறு போலீஸாருக்கு தகவல் கிடைத்து.
இதையடுத்து, திருவட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவசங்கா், சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது, செறுகோல் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (36) புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைப் பிடித்துச் சென்று, அவரது வீட்டில் சோதனை நடத்தி 100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அஜித்குமாரை கைது செய்தனா்.
விசாரணையில், அவா் மஞ்சாலுமூடு பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணி செய்வது தெரிய வந்தது.

