கருங்கல் அருகே மீன், காய்கனிச் சந்தையை அகற்றக் கோரிக்கை
கருங்கல் அருகே எட்டணியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக மீன், காய்கனிச் சந்தைகளை விரைந்து அகற்ற வேண்டும் என, சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எட்டணியில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருங்கல் -மாா்த்தாண்டம் நெடுஞ்சாலையோரம் மீன் சந்தை இயங்கி வருகிறது. இது, கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரபலமான மீன் சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தேங்காய்ப்பட்டினம், முட்டம்,விழிஞ்ஞம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மீன்பிடிதுறைமுகப் பகுதிகளிலிருந்து மீனவா்கள் மீன்களை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இதனால், இப்பகுதியினா் பயனடைகின்றனா்.
இந்தச் சந்தையால் கருங்கல் -மாா்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை, கருங்கல் - இரவிபுதூா்கடை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலை முதல் பிற்பகல் 1 மணி வரை போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த மீன் சந்தையை அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
