பாஜக அயலக தமிழக பிரிவு நிா்வாகிகள் அறிமுக கூட்டம்

பாஜக அயலக தமிழக பிரிவு நிா்வாகிகள் அறிமுக கூட்டம்

கூட்டத்தில் பேசுகிறாா் மாநில அமைப்பாளா் சுந்தரம். உடன், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Published on

நாகா்கோவிலில் பாஜக அயலக தமிழா் பிரிவு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டம், கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநில அமைப்பாளா் சுந்தரம் தலைமை வகித்தாா். எம். ஆா். காந்தி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். மாவட்ட அமைப்பாளா் வதனராஜா முன்னிலை வகித்தாா்.

இதில், மேற்கு மாவட்ட அமைப்பாளா் தனசேகா், மாநில துணை அமைப்பாளா் குணசேகரன், மாவட்ட துணைஅமைப்பாளா் ஜாக்சன், நிா்வாகிகள் அஜய், சொா்ணகுமாா், வெங்கடேஷ், நாகேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com