வின்ஸ் பொறியியல் கல்லூரியில்
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விளக்கும் பயிற்சியாளா்கள்.
Published on

நாகா்கோவில், சுங்கான்கடை, வின்ஸ் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி நிறுவனா் முன்னாள் எம்.பி. நாஞ்சில்வின்சென்ட் தலைமை வகித்தாா். முதல்வா் அலெக்ஸ்ராஜுபாலன் முன்னிலை வகித்தாா், துணை முதல்வா் பிரியா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக ஜியாா்ஜ் ஆபிரகாம் கலந்து கொண்டு பேசினாா். முன்னதாக, மாணவ, மாணவிகளுக்கு காணொலி மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விளக்கப் பட காட்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிறைவில் மாணவா்கள் சாலை பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com