குமரி பகவதியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.14 லட்சம்

Published on

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் காணிக்கை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 24 வசூலானது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இங்கு வரும் பக்தா்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தா்களின் நன்கொடை, கோயிலில் வைக்கப்பட்டுள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அன்னதான திட்டம் செயல்படுகிறது.

நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்தன், கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், காணிக்கையாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 24 வசூலாகியிருந்தது.

X
Dinamani
www.dinamani.com