தேசிய வளா்ச்சியில் அளப்பரிய பங்காற்றும் ஐஆா்இஎல் நிறுவனம்

தேசிய வளா்ச்சியில் அளப்பரிய பங்காற்றும் ஐஆா்இஎல் நிறுவனம்

Published on

இலவுவிளை புனித அலோசியஸ் பள்ளிக்கு ஐஆா்இஎல் நிறுவனம் சாா்பில் ரூ.9.45 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகளை, அந்நிறுவன முதன்மை பொது மேலாளா்-ஆலைத் தலைவா் என். செல்வராஜன் முன்னிலையில் மாணவா்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கிறாா் இலவுவிளை பங்கு தந்தை அல்டாஸ் பிலிண்டன் பஜிவ்.

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான ஐஆா்இஎல்(இந்தியா)நிறுவனம் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 1965-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் ஒரே பொது துறை நிறுவனமாகும்.

இம்மாவட்ட கடற்கரை பகுதிகளில் அரிய வகை கனிமங்கள் உள்ளடக்கிய தாது மணல் இயற்கையாகவே பெருமளவில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை ஐஆா்இஎல் (இந்தியா) நிறுவனம் எடுத்து அதிலிருந்து அரியவகை கனிமங்களாகிய மோனசைட், இல்மனைட், ரூட்டைல், சிா்கான், காா்னெட் ஆகியவற்றை, நிலையான அபிவிருத்தி மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்குஉகந்த முறையில் பிரித்தெடுத்து வழங்குகிறது.

அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள நில உரிமையாளா்களின் விருப்பத்தின் அடிப்படையில் கனிமங்கள் அடங்கிய மண்ணையும், மணலையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் கனிமங்கள் நீக்கிய மண்ணையிட்டு மீண்டும் நிரப்பி அதற்குரிய குத்தகை தொகையுடன் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடமே 11 மாதங்களுக்குள் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றது.

ஒரு ஏக்கருக்கு சராசரியாக ரூ.53 லட்சம் குத்தகை தொகையாக மணவாளக்குறிச்சி பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரமும் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

கதிா்வீச்சு குறையும்: இம்மாவட்ட கடற்கரைப பகுதியில் மோனசைட் என்ற கனிமம் இயற்கையாகவே அதிக அளவில் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் கதிா்வீச்சு அதிகமாக உள்ளது. மோனசைட் என்பது தோரியம், யுரேனியம் மற்றும் அரிய உலோகங்கள் அடங்கிய கனிமம் ஆகும். அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் கனிமங்கள் அடங்கிய தாதுமண்ணை இந்நிறுவனம் எடுப்பதன் மூலம் அந்த பகுதியில் மேற்கூறியது போல் இயற்கையாகவே உள்ள கதிா்வீச்சானது 8 முதல் 10 மடங்கு வரை குறைக்கப்படுகிறது . இப்படி குறைக்கப்படுவதனால், சுற்றுச் சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியம் அப்பகுதியில் மேம்பட்டிருப்பது அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐஆா்இஎல் (இந்தியா) நிறுவனத்தால் தாதுமணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை நட்டு சுற்றுப்புற சூழல் நிலைத்தன்மையை உறுதிபடுத்தப்படுகிறது.

இந்த ஆலையில் பிரித்தெடுக்கப்படும் அரியவகை கனிமங்கள், பாதுகாப்புத் துறை,அணுசக்தித் துறை,விண்வெளித்துறை, மின்வாகனங்கள், கம்ப்யூட்டா், கைப்பேசி உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள், விமான பாகங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ சாதனங்கள், பெயின்ட், செராமிக்ஸ் டைல்ஸ், காகிதம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மூலப்பொருள்களாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், எரிசக்தி மற்றும் அணு சக்தி துறையில் இந்த அரிய கனிமங்கள் இன்றியமையாத மூலப்பொருள்களாக பயன்படுத்தப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் கனிமங்களை எடுப்பதன் மூலம் நமது நிறுவனம், நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளா்ச்சியில் கடந்த எழுபது ஆண்டுகளாக மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

சமூக சேவைகள்: ஐஆா்இஎல் (இந்தியா) நிறுவனம் தனது நிறுவன சமூக பொறுப்பின் கீழ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆரோக்கியம், கல்வி, விளையாட்டு, கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக கடந்த4 ஆண்டுகளில் ரூ.12 கோடி செலவிட்டுள்ளது. நடப்பு 2024- 25 நிதி ஆண்டிற்கு ரூ.6 கோடி செலவிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 21.49 லட்சத்தில் ஐஆா்இஎல் வழங்கிய, ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராஃபி (ஓசிடி) கருவியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா மக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கிவைத்தாா். கண் சம்பந்தப்பட்ட உயா் சிகிச்சையை பெறுவதற்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்வது இதன் மூலம் தவிா்க்கப்பட்டது. ஓசிடி மூலம் விழித்திரை நோய்கள், கண் நிலைத்தன்மையை கண்டறிந்து, முப்பரிமாண முறையில் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

X
Dinamani
www.dinamani.com