மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது

News image

கைது - பிரதி படம் - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:30 pm

பளுகல் அருகே உள்ள தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பளுகல் போலீஸாா் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று சோதனை செய்தனா்.

இதில், அப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 68 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, மதுபானம் பதுக்கிய மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சூசை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.