மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மயிலாடியில் சிற்ப தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:34 pm

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் சிற்பத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடி, சேந்தன்புதூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (38). கல் சிற்பத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூா்த்தி, பல்வேறு நபா்களிடம் கல் சிற்பம் செய்வதற்காக ஆா்டா் எடுத்து தொழில் செய்து வந்துள்ளாா்.

ஆனால், சிற்பம் செய்ய போதிய தொழிலாளிகள் கிடைக்கவில்லையாம். எனவே, இரவு பகலாக வேலை செய்து வந்துள்ளாா். இருந்தபோதும், அவரால் குறித்த நேரத்திற்கு சிற்பங்களை செய்து கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த மூா்த்தி சனிக்கிழமை விஷம் குடித்ததாகத் தெரிகிறது.

உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.