கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே பரைக்கோட்டில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:33 am IST

தக்கலை அருகே பரைக்கோட்டில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.

பரைக்கோடு பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினா் மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.