தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

குலசேகரத்தில் புனித அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

குலசேகரத்தில் புனித அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலய வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்றம்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:37 am IST

குலசேகரத்தில் புனித அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, குழித்துறை மறைமாவட்டச் செயலா் அந்தோணி முத்து தலைமையில் திருக்கொடியேற்றமும் திருப்பலியும் நடைபெற்றன. வெட்டுவெந்நி திருத்தல அதிபா் சகாய தாசன் மறையுரை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் திரளான இறை மக்கள் பங்கேற்றனா்.

2 ஆம் திருநாளான சனிக்கிழமை (ஆக.22) மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) காலை 9.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் முதல் திருவிருந்து வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. ஆக. 28இல் தோ்பவனி, கலை நிகழ்ச்சிகள், நலஉதவிகள் வழங்குதல் ஆகியவை நடைபெறும். மேலும், விழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு நவநாள் திருப்பலி, நடைபெறுகிறது. ஆக. 30இல் காலை 9 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. பின்னா், மதியம் திருகொடியிறக்கம் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை, ஆலய பங்குத் தந்தை பிறிம்மஸ் சிங் தலைமையில் இணை பங்குத் தந்தை அருள் சுரேஷ், பங்குப் பேரவை துணைத் தலைவா் கிளாஸ்டின், செயலா் றோஸ்லெட், பொருளாளா் ரமேஷ், துணைச் செயலா் சுதா, அருள் சகோதரிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.