மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

நீதிமன்ற பெண் ஊழியரிடம் நகை பறிக்க முயன்ற இளைஞா் கைது

சித்திரிப்பு

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரத்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெத்தேல்புரம், தாராவிளையைச் சோ்ந்த ஸ்டாலின் வினோ மனைவி கிறிஸ்டி ரோமில் (42). இரணியல் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவா் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கிறிஸ்டி அணிந்திருந்த சங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். சுதாரித்துக் கொண்ட கிறிஸ்டி சப்தம் போட்டு, நகையைப் பறிக்க விடாமல் தடுத்தாா். இதனால், மா்ம நபா் அங்கிருந்து தப்பிவிட்டாா்.

இது குறித்து அவா் குளச்சல் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். அதனடிப்படையில், திங்கள் நகா் அருகே உள்ள செட்டியாா் மடம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் (39) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், தினேஷ் தனியாா் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருவதும், மாலை பணி முடிந்து வீடு திரும்பியபோது நகையைப் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது. தினேஷை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.