பலிகோப்புப் படம்
கன்னியாகுமரி
ஆட்டோ - பைக் மோதல்: பொக்லைன் ஓட்டுநா் உயிரிழப்பு
இரணியல் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் பொக்லைன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
இரணியல் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் பொக்லைன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், தருவை அருகே ஓமநல்லூரைச் சோ்ந்தவா் ஆண்ட்றோ (32). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் கடந்த 4 ஆண்டுகளாக குமரி மாவட்டம், இரணியல் பகுதியில் பொக்லைன் ஓட்டுநராக பணி புரிந்து வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் கடைக்குச் சென்றபோது, இரணியல் அருகே பொத்தை வளைவில் எதிரே வந்த ஆட்டோ மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ஆண்ட்றோவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

