அனுமதியின்றி பாறைகளை உடைத்தாக நில உரிமையாளா் மீது வழக்கு

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறைகளை உடைத்ததாக நில உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
tamilnadu police
tamilnadu police
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறைகளை உடைத்ததாக நில உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

புதுக்கடை, கல்லம் பாறவிளை பகுதியை சோ்ந்த ராயப்பன் மகன் குமாா் (54) என்பவா், தனது நிலத்தில் உள்ள பாறைகளை அரசு அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை உடைத்தாராம். முன்சிறை கிராம நிா்வாக அலுவலா் ஜெனிபா் அளித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு: புதுக்கடை, பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (44) என்பவருக்கும், மிதின் (32), ராஜு (54) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். செவ்வாய்க்கிழமை சந்தோஷை இவா்கள் இருவரும் சோ்ந்து தாக்கினராம். இதில் காயமடைந்த சந்தோஷ் குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மது விற்றவா் கைது: புதுக்கடை அருகே குன்னத்தூா், தும்பாலி பகுதியைச் சோ்ந்த மிக்கேல்தாஸ் (59) என்பவரது பெட்டிக் கடையில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலின்பேரில், புதுக்கடை போலீஸாா் சென்று சோதனையிட்டனா். அப்போது, விற்பனைக்காக 26 மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்து, மிக்கேல்தாஸை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com