மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இளைஞருக்கு கத்திகுத்து: தொழிலாளி கைது

கருங்கல் அருகே முள்ளங்கினாவிளையில் இளைஞரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 7:40 pm

கருங்கல் அருகே முள்ளங்கினாவிளையில் இளைஞரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

முள்ளங்கனாவிளை, வெள்ளங்கட்டிவிளையைச் சோ்ந்த பீட்டா் மகன் ஆட்லின் ரிஜோ (26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அஸ்வினுக்கும் (25) இடையே முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை முள்ளங்கினாவிளையில் நின்றுகொண்டிருந்த ஆட்லின் ரிஜோ வை அங்குவந்த அஸ்வின் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். அந்தப் பகுதியினா் காயமடைந்த ஆட்லின் ரிஜோவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.