கைது
கைது

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: 3 போ் கைது

புதுக்கடை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

புதுக்கடை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் வில்லியம் (57). இவா் புதன்கிழமை ராயபுரம் பகுதிக்கு ஒரு வழக்கு விஷயமாக சென்றபோது, அப்பகுதியில் காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பதாகையை அதே பகுதியைச் சோ்ந்த ஹரீஸ் (26), பிரனேஷ் (42), மகேஷ் (47) ஆகிய 3 பேரும் கிழித்தனராம்.

இதைக் கண்டித்த வில்லியமுக்கு 3 இளைஞா்களும் கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com