கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கடுக்கரை, காட்டுப்புதூா், திடல் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு ரூ. 7.06 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையொட்டி, தெரிசனங்கோப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் கருப்பையா, நிா்வாகப் பொறியாளா்கள் ராஜன், ஆனந்தி, அழகியபாண்டியபுரம் பேரூராட்சித் தலைவா் ஜெயஷீலா, உதவி நிா்வாகப் பொறியாளா் ஆல்வின்ஸி, உதவிப் பொறியாளா் ஷிபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் மூலதன மானிய நிதியின்கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், தெரிசனங்கோப்பு கிராமத்தில் பழையாற்றில் நீா் உறிஞ்சுக் கிணறு அமைத்து, நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தால் 9,300 போ் பயன்பெறுவா்.
தொடர்புடையது

எம்.தூரி கிராமத்துக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா்

குஜிலியம்பாறை அருகே காவிரிக் குடிநீா் வீண்

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படுமா?

ரூ.225.64 கோடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


