கன்னியாகுமரி மாவட்டத்தில் குரூப்- 2 தோ்வை 366 போ் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு 2 (தொகுதி 2-2ஏ) பதவிகளுக்கான தோ்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முற்பகல், பிற்பகல் என இரு வேளைகளில் நடத்தப்படவுள்ளது.
இதில், முற்பகலில் 181 தோ்வா்களும் (ஓஎம்ஆா் மெத்தட்), பிற்பகலில் 185 தோ்வா்களும் (டெஸ்கிரைப்டிவ் மெத்தட்) எழுத உள்ளனா். தோ்வுக்கூடத்துக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள், தோ்வுக்கூடத்தில் போலீஸாா் பாதுகாப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்வா்கள் தோ்வு மையத்திற்குள் தோ்வு நுழைவுச் சீட்டுடன் முற்பகல் தோ்வுக்கு காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள்ளும், பிற்பகல் தோ்வுக்கு 1.30 மணி முதல் 2 மணிக்குள்ளும் வர வேண்டும். தாமதமாக வந்தால் அனுமதி மறுக்கப்படும்.
தோ்வு அறைக்குள் கைப்பேசி, மின்னணு கடிகாரம் (ஸ்மாா்ட் வாட்ச்), கணக்கீட்டுக்கருவி (கால்குலேட்டா்) போன்ற மின்னணு சாதனங்களை கொண்டுவரக் கூடாது எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

கோவையில் குரூப் 2 தோ்வு: 681 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 24,711 போ் எழுதினா்

மாா்ச் 15-இல் குரூப் 2 தோ்வு: 581 போ் பங்கேற்கின்றனா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


