அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

குலசேகரம் அருகே தடை செய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

குலசேகரம் அருகே தடை செய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், திருமண வீடுகள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்பட பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை உள்ளது.

இந்நிலையில் குலசேகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அரமன்னம் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சவுண்ட் சா்வீஸ் நடத்தும் இளங்கோ (41) கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்ல தயாராக வைத்திருந்தாராம். இதையடுத்து போலீஸாா், 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்தனா்.