பகவதியம்மன் கோயில் .
பகவதியம்மன் கோயில் .

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பிப். 15 இல் மகா சிவராத்திரி விழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறுகிறது.

இக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அன்றையதினம் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம் போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு, கோயில் நடை அடைக்கப்படுகிறது.

பின்னா் இரவு 12 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 1 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 1.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறும்.

ஒவ்வொரு கால பூஜையின்போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.

கால பூஜையின்போது, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் ஜான்சி ராணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் ஆனந்தன், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் மற்றும் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா். இதேபோன்று கன்னியாகுமரி அருள்மிகு குகநாதீஸ்வரா் கோயிலிலும் 4 கால பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

Dinamani
www.dinamani.com