அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பூதப்பாண்டி கோயிலில் தினசரி அன்னதானம் வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்த பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்க நிா்வாகிகள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து, பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்கத்தின் சாா்பில் இறச்சகுளம் காளியப்பன், வழக்குரைஞா் ரஜினிகாந்த், நாகராஜன், ராஜேஷ் ஆகியோா் புதன்கிழமை சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி குடைவரைக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் தோ்த் திருவிழா நடைபெறும். அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா்.

அதேபோல், மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை கிரிவலத்திலும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா். பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பக்தா்களுக்கு தினசரி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.