வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திமுக கருத்துக் கேட்பு கூட்டம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:09 am

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பால் வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்து கொண்டு இத் தொகுதிக்கு உள்பட்ட வணிகா்கள், தொழில் முனைவோா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தாா்.

இதில் மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்கத் தலைவா் சுந்தர்ராஜ், களியக்காவிளையைச் சோ்ந்த மீன் வியாபாரிகள் சங்க நிா்வாகி எஸ். மாகீன் அபுபக்கா், மாா்த்தாண்டம் வணிகா் சங்க தலைவா் தினகா், களியக்காவிளையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மீரான்பிள்ளை, ஜனநாயக கிறிஸ்தவ பேரவை விளவங்கோடு வட்ட நிா்வாகி ஜான்ரோஸ் உள்ளிட்ட பலா் கோரிக்கையை முன்வைத்தனா். குழித்துறை நகர திமுக செயலாளா் வினுகுமாா், மாவட்ட ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளா் ரூபின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.