ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

களியக்காவிளை அருகே மீட்கப்பட்டது ஜாா்க்கண்ட் தொழிலாளி சடலம்

களியக்காவிளை அருகே சடலமாக மீட்கப்பட்டவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி என தெரியவந்தது.

News image

பலி

Updated On :17 பிப்ரவரி 2026, 9:57 pm

களியக்காவிளை அருகே சடலமாக மீட்கப்பட்டவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி என தெரியவந்தது.

களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் இருந்து கைதக்குழி செல்லும் பாதையில் குடியிருப்பு வீடுகளையொட்டிய பகுதி பள்ளத்தில் கிடந்த சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் கடந்த சனிக்கிழமை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சடலமாக மீட்கப்பட்டவா் ஜாா்க்கண்ட் மாநிலம், டாப்கரா கும்லா, பூஜன்காடிப்பாட்டோலா என்ற பகுதியைச் சோ்ந்த துருஓரான் மகன் திலிப் டிரிக்கி (40) என்பதும், இப் பகுதியில் தங்கியிருந்து கல் உடைக்கும் தொழில் செய்து வந்ததும், குறிப்பிட்ட நாளில் கைதக்குழி பகுதி வழியாக நடந்து சென்ற போது பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் திலிப் டிரிக்கி சடலத்தை அவரது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.