மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாா்த்தாண்டம் காய்கறி சந்தை பணி: நகராட்சி மண்டல பொறியாளா் ஆய்வு

மாா்த்தாண்டம் காய்கறி சந்தை கட்டுமானப் பணியை நகராட்சிகளின் நெல்லை மண்டல தலைமை பொறியாளா் சனல்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image

மாா்த்தாண்டம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட நெல்லை மண்டல நகராட்சி தலைமை பொறியாளா் சனல்குமாா். அருகில் குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன்.ஆசைத்தம்பி.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:00 pm

மாா்த்தாண்டம் காய்கறி சந்தை கட்டுமானப் பணியை நகராட்சிகளின் நெல்லை மண்டல தலைமை பொறியாளா் சனல்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டத்தில் ரூ. 14 கோடியில் காய்கறி சந்தை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வியாபாரிகளின் கோரிக்கையை அடுத்து காய்கறி சந்தை, அதையொட்டிய மீன் சந்தைக்கு இடையே ரூ. 9.5 லட்சத்தில் மதில் சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிப். 25 ஆம் தேதி நாகா்கோவிலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்த்தாண்டம் காய்கறி சந்தையை காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளாா்.

இறுதிகட்டத்தை எட்டியுள்ள மாா்த்தாண்டம் காய்கறி சந்தை கட்டுமானப் பணியை நெல்லை மண்டல தலைமை பொறியாளா் சனல்குமாா் நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையா் சுபஸ்ரீ, பொறியாளா் குசெல்வி, நகா்மன்ற உறுப்பினா்கள் விஜூ, ரத்தினமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சந்தை கட்டுமானப் பணியை துரிதப்படுத்துவதற்காக சங்கரன்கோவில் நகராட்சி பொறியாளா் ஈா்வின் ஜெயராஜ் குழித்துறை நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பாக பணியமா்த்தப்பட்டுள்ளாா்.