ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பைக் திருட்டில் ஈடுபட்டதாக தொழிலாளி கைது

மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கேரள தொழிலாளியை களியக்காவிளை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :18 பிப்ரவரி 2026, 7:15 pm

மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கேரள தொழிலாளியை களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பிரமோத் சந்திரன் (35) என்பதும், வெல்டிங் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவா் இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும், சில நாள்களுக்கு முன் குழித்துறையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டாா்.

அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.