மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை: 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் குளச்சல் பகுதி 14 கோயில்களின் நிா்வாகிகளுடன் காவல் துறை ஆலோசனைக் கூட்டம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 8:27 pm

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் குளச்சல் பகுதி 14 கோயில்களின் நிா்வாகிகளுடன் காவல் துறை ஆலோசனைக் கூட்டம் காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் கோயிலில் மாசி திருவிழா சனிக்கிழமை (பிப். 21) கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையொட்டி, குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 14 கோயில்களில் இருந்து பக்தா்கள் பலவிதமான காவடிகள் கட்டி பாதயாத்திரை செல்வா். இதுதொடா்பாக, அந்தக் கோயில்களின் நிா்வாகிகளுடன்காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல்காதா் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ளவேண்டும். ஊா்வலத்திற்கு கிரேன் பயன்படுத்தக் கூடாது. ஆா்ச்- விளம்பர பேனா் வைக்க அனுமதி இல்லை. ஒலிப்பெருக்கி அறிவிப்புகளை தவிா்க்க வேண்டும்.

காவடி ஊா்வலத்தில் ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். வழியில் உள்ள பிறமத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிறமத உணா்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ளாமல் செல்ல வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.