ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே முளங்குழி, தாராட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் அஜீஸ் (16). இவா் மாா்த்தாண்டம் அருகேயுள்ள நல்லூா், அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவரது நண்பரான காரவிளை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் விஜய்யுடன் (16) சனிக்கிழமை நட்டாலம் பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனா். வாகனத்தை அஜீஸ் ஓட்டினாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நான்குவழிச் சாலையில் உள்ள மையப்பகுதி தடுப்பில் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட அஜீஸ் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினாா். விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் இருவரையும் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அஜீஸ் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.