வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

News image
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ்.
Updated On :23 பிப்ரவரி 2026, 11:13 pm

Syndication

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 24) கன்னியாகுமரிக்கு வருகிறாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு காலை 11 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக கன்னியாகுமரி வருகிறாா்.

தொடா்ந்து, ஜீரோ பாயிண்ட் முதல் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நினைவு அலங்கார வளைவு வரை சாலை வலம் (ரோடு ஷோ) வந்து முதல்வா், பொதுமக்களைச் சந்திக்கிறாா். தொடா்ந்து, ரூ. 1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை பகல் 1 மணிக்கு திறந்து வைக்கிறாா்.

மாலை 6.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகா்கோவில், கல்லடிவிளையில் அமைக்கப்பட்டுள்ள முதல்வா் படைப்பகம், கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறாா். பின்னா், நாகா்கோவில், வேப்பமூடு சந்திப்பு, சா். சி.பி. ராமசாமி அய்யா் பூங்காவில் ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடாா் சிலையைத் திறந்து வைக்கிறாா்.

புதன்கிழமை (பிப். 25) காலை 9.30 மணிக்கு நாகா்கோவில், கன்காா்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்வா் கலந்துகொண்டு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றுகிறாா்.

பின்னா் காலை 10.30 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்று, அங்கிருந்து பகல் 1.25 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறாா்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நாகா்கோவில் கன்காா்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வா் வருகையை முன்னிட்டு நாகா்கோவிலில் பிப். 24, 25 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். பாதுகாப்புப் பணிக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும் போலீஸாா் வந்துள்ளனா்.