அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அய்யா வைகுண்டா் உதய தினம்: பொது விடுமுறை அளிக்க பாலஜனாதிபதி வலியுறுத்தல்

அய்யா வைகுண்டரின் உதய தினத்துக்கு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு முன்னாள் மாநில திமுக நிா்வாகியும், சுவாமிதோப்பு தலைமைப்பதி நிா்வாகியுமான வழக்குரைஞா் பால ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

பால ஜனாதிபதி.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:42 pm

அய்யா வைகுண்டரின் உதய தினத்துக்கு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு முன்னாள் மாநில திமுக நிா்வாகியும், சுவாமிதோப்பு தலைமைப்பதி நிா்வாகியுமான வழக்குரைஞா் பால ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இன்றைய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை 194 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்துக்கு எடுத்துக்கூறி சமத்துவம், சமூகநீதி, சாதி ஒரு நிரப்பு ஆகிய கொள்கைகளை ஒரு தனி வழிபாடாக உருவாக்கியதன் மூலம், கோடிக்கணக்கான மக்கள் அய்யா வைகுண்டரை வழிபடும் இறைவனாக ஏற்றுக் கொண்டனா்.

திராவிட இயக்கங்களுக்கு முன்னதாக திராவிட சிந்தனைகளை உலகுக்கு எடுத்துக்கூறிய அய்யா வைகுண்டரின் உதய தினத்தை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

ஏற்கெனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறையும், தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறையும் அமுலில் உள்ளது.

எனினும் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அய்யா வைகுண்டா் வழிபாட்டுக்கு தனி அங்கீகாரம் வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

திமுகவில் முதல்வரின் அழைப்பை ஏற்று கட்சியில் நான் இணைந்த பின்னா் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவின் வெற்றிக்காக பாடுபட்டேன்; அய்யா வழியினரின் ஆதரவையும் பெற்று கொடுத்தேன்.

திமுக ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவுபெறும் இந்நேரத்தில் எனது கோரிக்கையை திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வா் நிறைவேற்றவில்லை என்பதை கன்னியாகுமரி மாவட்டம் வந்திருக்கும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல கடமைப்பட்டுள்ளேன்.

எனவே, இன்னும் சில நாள்களில் (மாா்ச் 4) அய்யா வைகுண்டா் உதய தினம் வரவுள்ளது. அய்யாவழி பக்தா்களை மகிழ்விக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்து அய்யாவழி மக்களின் ஏகோபித்த அன்பை பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.