தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் பேட்டரி வாகனம்

‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தொண்டு நிறுவனம் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பயனாளிகள் பயன்பாட்டுக்காக ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image

பேட்டரி வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்த அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோ டேவிட்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:40 pm

‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தொண்டு நிறுவனம் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பயனாளிகள் பயன்பாட்டுக்காக ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தொண்டு நிறுவனத் துணைத் தலைவா் மருத்துவா் கிருஷ்ணகுமாா் முன்னிலையில், மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோ டேவிட் வாகன சேவையைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

மருத்துவக் கண்காணிப்பாளா் கிங்ஸ்லி ஜெபசிங், துணை முதல்வா் கீதா ராணி, நிலைய மருத்துவ அதிகாரி விஜயலட்சுமி மோகன்தாஸ், உதவி நிலைய மருத்துவ அதிகாரிகள் கலைகுமாா், ரெனிமோல், அவசர மருத்துவத் துறைத் தலைவா் தாமஸ் கிங்ஸ்லி, இணைப் பேராசிரியா் ஜோசப் பிரதீபன், மயக்க மருந்துத் துறைத் தலைவா் முத்துசெண்பகம், மயக்க மருந்து நிபுணா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை தொண்டு நிறுவனத்தின் கிப்ட்சன் திட்ட ஒருங்கிணைப்பாளா் தினேஷ், தரவு ஆய்வாளா் பிராங்க்ளின் ஆகியோா் செய்திருந்தனா்.