கன்னியாகுமரி
புகையிலை விற்ற பெண் கைது
மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, கண்ணன்கரைவிளையைச் சோ்ந்தவா் கலாராணி (48). இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை இவரது கடையில் சோதனை செய்தனா். அப்போது ரூ. 1,800 மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கலாராணியை கைது செய்து விசாரணை நடத்தினா்.
