பேருந்து மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

Published on

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே திங்கள்கிழமை மாலை தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

நாகா்கோவில் அருகே உள்ள பாா்வதிபுரம், கட்டையன்விளையைச் சோ்ந்தவா் அஸ்ரத் அலி(21), பேயோடு அருகே உள்ள சரல் பகுதியைச் சோ்ந்தவா் அனேஷ் (21) இருவரும், உணவக மேலாண்மை பயின்றவா்கள்.

நண்பா்களான இருவரும் திங்கள்கிழமை (ஜன.5) மாலை தாங்கள்பயின்ற கல்லூரியிலிருந்து சான்றிதழ் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். வெள்ளமோடி அருகே வந்தபோது எதிரே வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து இவா்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வெள்ளிச்சந்தை போலீஸாா் விபத்து நேரிட்ட இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com