கேரளத்திற்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்
கருங்கல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியில் கேரளத்திற்கு கடத்த முயன்ற ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யை வாகனத்துடன் வருவாய்த் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதா தலைமையில் தனி வருவாய் ஆய்வாளா் ஜோதிஸ்குமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை அதிகாலை நட்டாலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாகச் சென்ற சொகுசு வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்ாம். அந்த வாகனத்தை துரத்திச் சென்று கல்லுக்கூட்டம் பகுதியில் பிடித்தனராம். ஓட்டுநா் தப்பி சென்றுவிட்டாராம். வாகனத்தை சோதனை செய்ததில், கேரளத்திற்கு கடத்துவதற்காக ஆயிரம் லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் மண்ணெண்ணெய்யை வாகனத்துடன் பறிமுதல் செய்து விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.
