கன்னியாகுமரி
மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
புதுக்கடை அருகே உள்ள குஞ்சாகோடு பகுதியில் மூதாட்டியின் ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
புதுக்கடை அருகே உள்ள குஞ்சாகோடு பகுதியில் மூதாட்டியின் ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
விழுந்தயம்பலம், குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த தங்கக்கண் மனைவி ஞானசெல்வம்(60). இவா், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தாராம். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள், மூதாட்டியிடம் இருந்த ஐந்தரை பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.