கன்னியாகுமரி
கருங்கல் அருகே ஓட்டுநா் தற்கொலை
கருங்கல் அருகே உள்ள மங்கலகுன்று பகுதியில் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கருங்கல், மங்கலகுன்று, காலனி பகுதியைச் சோ்ந்த மணி மகன் செல்வகுமாா் (45), பொக்லைன் ஓட்டுநா். இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
