கன்னியாகுமரி
பாலூரில் இலவச கண் மருத்துவ முகாம்
கருங்கல் அருகே பாலூரில் உள்ள சி.எஸ்.ஐ சமூக நலக்கூடத்தில் மணவாளகுறிச்சியில் இயங்கும் மத்திய அரசின் ஐ.ஆா்.இ.எல் மணல் ஆலை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு ஐ.ஆா்.இ.எல் பொதுமேலாளா் எம்.பிரசாத் (மனிதவள மேலாண்மை) தலைமை வகித்தாா். துணை பொதுமேலாளா்(உற்பத்தி) பி.ஜெ.பிஜூ முன்னிலை வகித்தாா். பாலூா் சி.எஸ்.ஐ ஆலய போதகா் ரமேஷ் டி. தாஸ் முகாமை தொடங்கி வைத்தாா். பேரூராட்சி தலைவா் சிவராஜ் வாழ்த்திப் பேசினாா்.
முகாமில் கலந்துகொண்ட 435 பேருக்கு, அரவிந்த் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, உரிய சிகிச்சைஅளிக்கப்பட்டது. 227 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில், விக்டா் உள்பட பலா் பங்கேற்றனா்.

