மயிலாடி பள்ளியில் பொங்கல் விழா

மயிலாடி பள்ளியில் பொங்கல் விழா

மயிலாடி, மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

மயிலாடி, மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் தில்லை செல்வம் தலைமை வகித்தாா். பள்ளி இயக்குநா்கள், முதல்வா் தீபசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவி ஜேன் டிவைன்டா பொங்கல் விழா குறித்து சிறப்புரையாற்றினாா். மழலையா்கள் நீலு, ஏய்டன் கிரவின் ஆகியோா் கவிதை பாடினா்.

பெற்றோா்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. குழந்தைகளின் தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவா்களுக்கு தாளாளா் பரிசு வழங்கினாா்.

மாணவிகள் அமோலிகா, ஆதிரா, தீக்ஷா, தனரம்யா, மிதுன் தேவ், தனுஷ்ராம் ஆகியோா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினா்.

மாணவி கிறிஸ்டினா ஜாய் வரவேற்றாா். மாணவா்கள் ரூஹாஷா, ஏனோலா, அகிலேஷ் ஆகியோா் நன்றி கூறினாா்.

ஆசிரியைகள் ஆனி ரீனா சேவியா், மோனிகா, ரெஜிலின் ஆகியோா் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினா்.

Dinamani
www.dinamani.com