கோதையாற்றில் நடமாடும் முதலையை படகில் சென்று தேடும் வனத்துறையினா்
கன்னியாகுமரி
கோதையாற்றில் நடமாடும் முதலை: படகுகளில் சென்று தேடிய வனத்துறையினா்
கோதையாற்றில் நடமாடும் முதலையை கண்காணித்து பிடிக்கும் வகையில் வனத்துறையினா் வியாழக்கிழமை ஆற்றுப் பகுதியில் படகுகளில் சென்று தேடுதலில் ஈடுபட்டனா்.
கோதையாற்றின் கடையாலுமூடு முதல் திற்பரப்பு வரையிலான பகுதிகளில் முதலை நடமாட்டம் காணப்படும் நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களும், அப்பகுதியிலுள்ள வாழைத் தோப்புகள், ரப்பா் தோட்டங்களுக்கு அதிகாலையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களும் அச்சமடைந்துள்ளனா்.
மேலும் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை ஆற்றுப் பகுதியில் வனத்துறையினா் இரு குழுவாக படகுகளில் சென்று முதலையை தேடினா். முதலையை விரைந்து பிடித்து வெளியேற்ற வனத்துறை, மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

