கோப்புப் படம்
கன்னியாகுமரி
சகோதரா்கள், முதியவா் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இனயம் பகுதியில் சகோதரா்களைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இனயம் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்கள் ரெஜி (33), ஜெரின்(30). வெள்ளிக்கிழமை இரவு இவா்களிடம் அதே பகுதியைச் சோ்ந்த வினிஸ்டன் (30), விஜய் (32) ஆகியோா் தகராறு செய்து தாக்கிவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
முதியவா் மீது தாக்குதல்: புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (60), அவரது சகோதரா் மகன் விஷ்ணு (30) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்ததாம்.
சனிக்கிழமை விஷ்ணு தாக்கியதில் மகேஸ்வரன் காயமடைந்தாராம். அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இருசம்பவங்கள் குறித்தும் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

